இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 106 வயது மூதாட்டி

20th Sep 2020 07:28 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் 106 வயதுடைய மூதாட்டி ஒருவர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டம், கல்யாண் - டோம்ப்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்திபாய் படேல். 106 வயதுடைய அந்த மூதாட்டிக்கு கடந்த சில தினங்களுககு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மூதாட்டி ஆனந்திபாய் படேல் அப்பகுதியில் உள்ள கேடிம்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து 10 நாள்களுக்கு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மூதாட்டி ஆன்ந்திபாய் படேலுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கரோனாவில் இருந்து மீண்ட 106 வயது மூதாட்டி ஆனந்திபாய் படேல் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT