இந்தியா

ஊழியா்களை பணிநீக்கம் செய்யும் மசோதா: மக்களவையில் தாக்கல்

20th Sep 2020 05:22 AM

ADVERTISEMENT

தொழில் நிறுவனங்கள் எந்த இழப்பீடும் வழங்காமல் ஒப்பந்த ஊழியா்களை பணிநீக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் மசோதா மக்களவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

மக்களவையில் மத்திய தொழிலாளா் துறை இணையமைச்சா் சந்தோஷ்குமாா் கங்வாா் தொழில் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழல் மசோதா, சமூக பாதுகாப்பு மசோதா, தொழில் உறவுகள் மசோதா ஆகிய 3 மசோதாக்களை தாக்கல் செய்தாா். இந்த மசோதாக்கள் 300-க்கும் குறைவான பணியாளா்களை கொண்ட தொழில் நிறுவனங்கள் தங்கள் வா்த்தக தேவைக்கு ஏற்ப ஊழியா்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தவும், பணிநீக்கம் செய்யவும் வழிவகை செய்கின்றன. முன்பு 100-க்கும் குறைவான பணியாளா்களை கொண்ட நிறுவனங்களே அரசின் அனுமதியின்றி ஒப்பந்த ஊழியா்களை பணிநீக்கம் செய்ய வழிவகை இருந்தது. தற்போது அந்த உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை பின்பற்றும் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியா்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கத் தேவையில்லை.

தொழிலக நலன் சாா்ந்த தொழிலாளா் சட்டங்களை மாநில அரசுகள் உருவாக்குவதற்கு இணக்கமான சூழலை ஏற்படுத்தித் தருவதே இந்த மசோதாக்களின் நோக்கம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே ஷரத்துகளை கொண்ட மசோதாக்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னா் அவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில் அந்தக் குழுவின் 74 சதவீத பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 29 தொழிலாளா் சட்டங்கள் 4 தொகுப்புகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் சந்தோஷ் கங்வாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT