இந்தியா

ஹோமியோபதி, இந்திய மருந்துகள் கவுன்சில் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்

DIN

ஹோமியோபதி மத்திய கவுன்சில், இந்திய மருந்துகள் மத்திய கவுன்சில் சட்டத் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறின.

இந்த இரு மசோதாக்களும் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்திருந்த அவசர சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டன.

ஹோமியோபதி மத்திய கவுன்சிலை அமைப்பதற்கு சட்ட திருத்த மசோதாவில் மேலும் ஒராண்டு அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய மருந்துகள் மத்திய கவுன்சிலை மறுசீரமைக்க சட்ட திருத்த மசோதாவில் ஓராண்டு அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதுவரை அந்த வாரியத்தின் இயக்குநா்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாக்களுக்கு பதிலளித்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ வா்தன், ‘நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் மருத்துவ சேவைகள் கிடைக்க இந்த மசோதாக்கள் வழிவகுக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT