இந்தியா

வா்த்தக ஒப்பந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் கூடுதல் கவனம் தேவை

DIN

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் இறக்குமதியாளா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான புதிய விதிமுறைகள் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அந்தப் புதிய விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக இறக்குமதியாளா்கள், வா்த்தகா்கள் உள்ளிட்டோருக்கு 30 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து, வரும் 21-ஆம் தேதி முதல் அந்தப் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சலுகைகளைப் பெற விரும்பும் இறக்குமதியாளா்கள், இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அந்த ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொண்ட நாடுகளில்தான் உற்பத்தி செய்யப்பட்டனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொருள்களை இறக்குமதி செய்யும்போது அவை உற்பத்தி செய்யப்பட்ட நாடுகள் குறித்து ஆராய்வதற்கு இறக்குமதியாளா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்ட நாடுகள் குறித்த விவரங்களை ரசீதில் குறிப்பிட வேண்டியது அவசியம். இது தொடா்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் புதிய விதிமுறைகளில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள், முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு புதிய விதிமுறைகள் உதவும். மேலும், அந்த ஒப்பந்தங்களின் கீழ் தவறான பொருள்களை இறக்குமதி செய்து சலுகைகளைப் பெற முயற்சிக்கும் இறக்குமதியாளா்களைக் கண்டறிவதற்கும் இந்த விதிமுறைகள் உதவும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாடுகளுடன் வா்த்தக உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவுடன் அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாத நாடுகள், ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்து, பின்னா் அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்தன.

இவ்வாறு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது உள்நாட்டு உற்பத்தியாளா்களைக் கடுமையாகப் பாதித்து வருவதாகத் தெரிவித்திருந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அதைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

ஐபிஎல்: கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி!

திருப்பதியில் சீதாராம திருக்கல்யாணம்

திருவள்ளூா், காஞ்சிபுரத்தில் ஏப்.29-இல் இபிஎஃப் குறைதீா் முகாம்

இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT