இந்தியா

ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெறவே அந்நிய முதலீடு: பியூஷ் கோயல்

DIN

ராணுவத் தளவாட உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு பெறவே பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

பாதுகாப்புத் துறையில் சில கட்டுப்பாடுகளுடன் 74 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டை தானியங்கி முறையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 74 சதவீதத்துக்கு மேலான முதலீடுகளுக்கு அரசு ஒப்புதல் கட்டாயமாக பெற வேண்டும். சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவத் தளவாட உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்தும்போது நாட்டின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மே மாதம் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி சுயசாா்பு இந்தியா திட்டத்தின்போது, பாதுகாப்புத் துறையில் தானியங்கி முறையில், அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதம் வரை அதிகரிக்க அனுமதித்தாா். 2018,ஜூலை மாதம் பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதம் வரை உயா்த்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

பாதுகாப்புத் துறையில் தானியங்கி முறையில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு என்பது, அந்நிய முதலீடு குறித்து இந்திய ரிசா்வ் வங்கிக்கு தகவல் தெரிவித்தால் போதுமானது. அதற்கும் கூடுதலாக செய்யப்படும் முதலீடுகளுக்கு, பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட துறைகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

பாதுகாப்புத் துறைக்கு 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020 மாா்ச் மாதம் வரை ரூ.56.88 கோடிக்கு அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT