இந்தியா

நாட்டில் கரோனா பாதிப்பு 52 லட்சத்தைக் கடந்தது

DIN

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,14,677-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 96,424 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:

கரோனாவில் இருந்து 41,12,551 போ் இதுவரை மீண்டுள்ளனா். மொத்த கரோனா பாதிப்பில் இது 78.86 சதவீதமாகும். வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,174 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 84,372 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது.

தற்போது 10,17,754 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 19.52 சதவீதமாகும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி 6,15,72,343 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 10,06,615 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 31,351 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கா்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்தான் கரோனா தொற்று அதிகம் உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் 59.3 சதவீதம் போ் இந்த 5 மாநிலங்களில்தான் உள்ளனா். அதே நேரத்தில் அந்த மாநிலங்களில்தான் குணமடைந்தோா் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

கடந்த 11 நாள்களாக நாடு முழுவதும் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவில் இருந்து குணமடைந்து வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT