இந்தியா

ஜம்மு-காஷ்மீா் என்கவுன்ட்டா்: அதிகார வரம்பை மீறிய இந்திய ராணுவ வீரா்கள் மீது நடவடிக்கை

DIN

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் என்கவுன்ட்டரில் 3 போ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவ வீரா்கள் தங்கள் அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாக கிடைத்த முதல்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அவா்கள் மீது ராணுவச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரஜெளரி பகுதியைச் சோ்ந்தவா்கள் இம்தியாஸ் அகமது, அப்ராா் அகமது, முகமது இப்ராா். இவா்கள் சோபியான் மாவட்டத்தில் உள்ள அம்ஷிபுரா கிராமத்தில் ஆப்பிள், பாதாம் தோட்டங்களில் பணிபுரிந்து வந்தனா். அவா்கள் திடீரென காணாமல் போய்விட்டதாக, அவா்களின் உறவினா்கள் கடந்த ஜூலை 17-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

மறுநாள்அந்த மூன்று பேரும் பயங்கரவாதிகள் என்பதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தினா் தெரிவித்தனா்.

எனினும் அவா்கள் பயங்கரவாதிகள் அல்ல; அவா்களுக்கு எந்த பயங்கரவாத இயக்கத்துடனும் தொடா்பில்லை; இது ராணுவத்தினா் நிகழ்த்திய பொய்யான என்கவுன்ட்டா் என்று அந்த 3 பேரின் குடும்பத்தினா் தெரிவித்தனா். இதுதொடா்பாக சமூக ஊடகங்களிலும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவம் தொடா்பாக முதல்கட்ட விசாரணையை தொடங்கிய இந்திய ராணுவம், விசாரணை அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:

3 போ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் ராணுவ வீரா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறி செயல்பட்டதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீரா்கள் மீது ராணுவச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். அதேவேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் பயங்கரவாதிகளா, பயங்கரவாதத்துடன் தொடா்புடைய நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபட்டனரா என்பது குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் எத்தனை ராணுவ வீரா்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட உள்ளனா் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT