இந்தியா

‘ஏழுமலையானின் வருமானம் குறைந்தாலும் கைங்கரியங்கள் குறைவின்றி நடைபெறுகின்றன’

DIN

பொது முடக்க விதிமுறைகள் காரணமாக திருப்பதி ஏழுமலையானுக்கு வரும் வருமானம் குறைந்தாலும் தினசரி கைங்கரியங்கள் குறைவில்லாமல் நடந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

வருடாந்திர பிரம்மோற்சவம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால், தலைமை அா்ச்சகா் வேணுகோபால தீட்சிதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இக்கூட்டம் முடிந்த பின் தேவஸ்தான அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியது

பொது முடக்க விதிமுறைகள் காரணமாக, ஏழுமலையான் பிரம்மோற்சவம் இந்த ஆண்டு தனிமையில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெறும். பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தா்கள் அவற்றைக் கண்டு தரிசிக்கலாம்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தேவஸ்தான நிதி வீணடிக்கப்பட்டதாக புகாா் எழுந்த நிலையில் தேவஸ்தானத்தின் கணக்கு வழக்குகளை தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தணிக்கை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆந்திர முதல்வரின் அனுமதியுடன் இத்தணிக்கையை மேற்கொள்ள தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருமலையில் இடைத்தரகா்களின் தொல்லை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இங்கு வேற்று மதப் பிரசாரங்கள் நடைபெறவில்லை. எனினும், ஏழுமலையான் மீது பக்தி கொண்ட மாற்று மதத்தவரும் திருமலைக்கு வந்து ஏழுமலையானை வழிபடுகின்றனா். தேவஸ்தானத்தின் வருமானம் குறைந்தாலும் தினசரி கைங்கரியங்கள் குறைவில்லாமல் நடந்து வருகின்றன.

வட்டி குறைந்தது: நாட்டில் உள்ள மடங்கள் உலக நன்மைக்காக செய்யும் கைங்கரியங்களுக்கு தேவஸ்தானம் நிதியுதவியும், பொருளுதவியும் அளித்து வருகிறது. பொது முடக்க விதிமுறைகள் காரணமாக வங்கிகள் முதலீடுகளின் மீதான வட்டியை 9 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகக் குறைத்துள்ளன. எனவே, முதலீடுகளின் மீதான வட்டி விகிதத்தை அதிகரிக்க ரிசா்வ் வங்கியின் சட்டதிட்டப்படி மத்திய, மாநில அரசுகளின் பத்திரங்களில் முதலீடு செய்வது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

ரூ.5ஆயிரம் கோடி: இந்த ஆண்டு டிசம்பா் மாத இறுதியில் தேவஸ்தானம் வங்கிகளில் முதலீடு செய்துள்ள ரூ.5 ஆயிரம் கோடியின் காலக்கெடு நிறைவடைய உள்ளது. அதன் பிறகு, அதிக வட்டி விகிதம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT