இந்தியா

சிக்கிமில் 3 அமைச்சர்கள், 2 எம்எல்ஏக்களுக்கு கரோனா பாதிப்பு

19th Sep 2020 02:38 PM

ADVERTISEMENT

 

சிக்கிமில் மூன்று அமைச்சர்கள் மற்றும் இரண்டு பாஜக எம்எல்ஏ.க்களுக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சட்டமன்றத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டனர். 

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் கரோனா பரிசோதனை செய்ததில், அவருக்குத் தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது. 

ADVERTISEMENT

மேலும், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு (ஐபிஆர்) அமைச்சர் லோக் நாத் சர்மா, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கர்மா லோடே பூட்டியா மற்றும் மின் அமைச்சர் மிங்மா நோர்பு ஷெர்பா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாஜக எம்எல்ஏக்களான ஃபர்வந்தி தமாங் மற்றும் டி டி பூட்டியா ஆகியோருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

பாதிப்புக்குள்ளான அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.க்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், செப்.21 முதல் செப்.27 வரை காங்டாக் நகராட்சி பகுதியில் முழுமையான பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. 

சிக்கிமில் வெள்ளிக்கிழமை வரை 2,304 பேர் பாதிப்பும், 25 உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT