இந்தியா

பிகாரில் ரூ.14000 கோடியில் நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

19th Sep 2020 08:04 PM

ADVERTISEMENT

பிகாரில் திங்கள்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாநிலத்தில் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.14 ஆயிரத்து 258 கோடி மதிப்பில் 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநிலத்தின் 45,945 கிராமங்கள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 350 கி.மீ நீளம் அமைக்கப்பட உள்ள இந்த நெடுஞ்சாலை மூலம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மேம்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் மாநிலத்தில் ரயில்வே, உள்கட்டமைப்பு, பாலங்கள், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டி வருகிறார்.

ADVERTISEMENT

2015 ஆம் ஆண்டில் பிகாரின் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு சிறப்பு தொகுப்பை மோடி அறிவித்திருந்தார். இந்த தொகுப்பில் ரூ .54,700 கோடி மதிப்புள்ள 75 திட்டங்கள் அடங்கியுள்ளன. அவற்றில் 13 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும் 38 வேலைகள் நடைபெற்று வருகின்றன, மற்றவை தொடங்கப்பட உள்ளன என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT