இந்தியா

ஐ.நா. பொது சபைக் கூட்டத்தின் இரு அமர்வுகளில் மோடி பங்கேற்பு: டி.எஸ். திருமூர்த்தி தகவல்

DIN

நியூயார்க்: செப்டம்பர் 21 ஆம் தொடங்க உள்ள ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பை முன்னிலைப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடியின் உரை இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள திருமூர்த்தி, முதல் நிகழ்வான பொது விவாதத்தில் நாட்டின் நிலைப்பாடு மற்றும் தேசிய அறிக்கையை சமர்பித்து உரையாற்ற உள்ளதாகவும்,  இரண்டாவது அமர்வு ஐ.நாவின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்ட முழுமையான கூட்டம். இதில், "இந்தியாவின் பங்களிப்பை முன்னிலைப் படுத்தும் விதமாக மோடியின் உரை இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தவர், கரோனா தொற்று பாதிப்பு மற்றும் 75-வது ஆண்டில் ஐ.நா. பொது சபை அடியெடுத்து வைக்கும் வரலாற்று தருணத்தில், வித்தியாசமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

"இந்த தருணத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நமது முன்னுரிமைகளை முன்னெடுப்போம்” என்று திருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி 'நிலையான வளர்ச்சிக்கு பல்லுயிர் மீதான அவசர நடவடிக்கை' என்ற கருப்பொருளுடன் பல்லுயிர் உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "இது ஐ.நா. பொது சபையின் பல்லுயிர் பற்றிய முதல் உச்சி மாநாடு ஆகும். இந்த உச்சிமாநாட்டில் நமது சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்க உள்ளார்" என்று அவர் கூறினார்.

உலகின் 10  பெரிய பல்லுயிர் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், பல்லுயிர் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது.

உலக மாநாட்டின் 25 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு முக்கியமான நிகழ்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.  இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ரானி கலந்து கொள்ளவுள்ளார், பெண்கள் அதிகாரம் மற்றும் பாலின உணர்திறன் குறித்த இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு உரையாற்றுகிறார்.

மேலும், ஐ.நா சபைக் கூட்டத்தின் இடையே நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாகவும், ஒரு நல்ல தருணத்தில் இந்தியா ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பங்கேற்க உள்ளதாக திருமூர்த்தி தெரிவித்தார்.

"அக்டோபர் 2 ஆம் தேதி, ஐ.நா. அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான சர்வதேச தினத்தை நடத்துகிறது. இதில், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்தியாவின் கருத்துக்களை வழங்கவுள்ளார்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் உலகம் இன்னும் இருப்பதால் ஐ.நா பொது சபைக் கூட்டம் முந்தைய அனைத்து அமர்வுகளிலிருந்தும் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். "உறுப்பு நாடுகள் கரோனாவை சீர்திருத்தங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்வோம் என்று நம்புவதாக திருமூர்த்தி கூறினார்.  தெரிவித்தார். 

கரோனா பயணக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான தலைவர்கள் நியூயார்க்கிற்குப் பயணிக்க மாட்டார்கள், உயர் மட்ட விவாதம் நடத்தப்படும். 

"உலகத் தலைவர்கள் தங்கள் தேசிய அறிக்கைகளை முன்பே பதிவுசெய்யப்பட்ட விடியோக்கள் மூலம் வழங்குவர். பொது சபையின் மண்டபம் காலியாக இருக்காது" என்று திருமூர்த்தி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT