இந்தியா

8 மாதத்தில் இந்திய எல்லையில் 3186 முறை அத்துமீறிய பாகிஸ்தான்

19th Sep 2020 04:34 PM

ADVERTISEMENT

இந்திய எல்லைப் பகுதிகளில் கடந்த 8 மாதங்களில் பாகிஸ்தான் 3186 முறை அத்துமீறியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஜம்முவின் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் 3186 முறை எல்லை அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் செய்தியை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

இது கடந்த 17 வருடங்களில் இல்லாத அளவிலான அதிகபட்ச எல்லைமீறல் நடவடிக்கையாகும். மேலும் கடந்த 6 மாதத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 192 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், எல்லைமீறல் குறித்த எச்சரிக்கைகள் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

ADVERTISEMENT

நடப்பாண்டில் பாகிஸ்தான் அத்துமீறலால் எட்டு இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளதாகத் மேலும் அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை 31 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை, பாலகோட் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் இருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Pakistan
ADVERTISEMENT
ADVERTISEMENT