இந்தியா

’கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை எம்.பி.க்கள் பின்பற்ற வேண்டும்’

DIN

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற அவை இன்று (சனிக்கிழமை) கூடியதும் உறுப்பினர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத்தில் துரித பரிசோதனை மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் கரோனா பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக்ஸிமீட்டர் மூலம் ஆக்ஸிஜன் அளவை பரிசோதனை செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் முழுக்க இந்த வசதி அமைக்கப்பட்டிருக்கும்.

கரோனாவுக்கு எதிரான போரில் முகக்கவசம் மிகச்சிறந்த தடுப்புக் கருவி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

இரண்டாவது முக்கியமான செயல் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது. மூன்றாவது முக்கியமான செயல் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது. நான்காவதாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

இதனை கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமான உணவு முறைகளாலும், உடற்பயிற்சியாலும் பெற இயலும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் ஆலோசிக்கும்போதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வளாகத்திற்குள் மற்ற உறுப்பினர்களுடன் ஆறடி தூரத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 

கடைப்பிடிக்க தவறும் நபர்கள் அவையிலிருந்து வெளியேறலாம். விவாதத்தின்போது எழும் கேள்விகளை தாள்களில் எழுத்து மூலம் தெரிவிக்கலாம் இவ்வாறு வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வெங்கையா நாயுடு இதனைத்தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT