இந்தியா

காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

DIN


தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க மாட்டேன் என்று மனைவிக்கு செல்லிடப்பேசியில் கூறிவிட்டு தலைமறைவானவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுமார் மூன்று மாதங்களாக கரோனா நோயாளி காணாமல் போனதாகக் கூறி தேடி வந்த மும்பை காவலர்கள், அவர் காதலியுடன் தலைமறைவான தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது யாதெனில், மணீஷ் மிஷ்ரா, நவி மும்பையில் வேலை செய்து வந்தார். ஜூன் 24-ம் தேதி தனது மனைவியை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய மணீஷ், தனக்கு கரோனா பாதித்திருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டு செல்லிடப்பேசியை அணைத்துவைத்துவிட்டார். 

அவரை தொடர்பு கொள்ள முடியாத குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கரோனா நோயாளி காணாமல் போனதாக செய்திகள் வெளியாக, அவரை காவல்துறையினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அவரது செல்லிடப்பேசி கடைசியாக இயக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து அங்குச் சென்ற காவல்துறை, அங்கு அவரது இரண்டு சக்கர வாகனம், பை, ஹெல்மெட் கிடந்ததைப் பார்த்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். அங்கிருந்த நீர்நிலைகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் அவரது உடல் கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில், மணீஷ் ஒரு பெண்ணுடன் காரில் ஏறிச் செல்வது பதிவாகியிருந்தது. தீவிர விசாரணையில், அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததையும் கண்டுபிடித்து, தனிப்படையினர் அங்குச் சென்று அவரை கைது செய்து நவி மும்பை அழைத்து வந்துள்ளனர்.

காதலியுடன் வாழ, கரோனா மீது பழிபோட்ட நபர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT