இந்தியா

பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் விற்பனைப் பட்டியலிலிருந்து 160 போலி காதி பொருள்கள் நீக்கம்

19th Sep 2020 05:06 PM

ADVERTISEMENT

 

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் உறுதியான நடவடிக்கையால், பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்நாப்டீல் ஆகியவற்றின் விற்பனைப் பட்டியலில் இருந்து 160 போலி காதி பொருள்களை நீக்க வைத்துள்ளது.

காதி என்னும் வணிகப் பெயரில் விற்கப்பட்டு வந்த 160 பொருள்களின் இணைய இணைப்புகள் இந்த மின் வணிக தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், காதி இந்தியா என்னும் பெயரில் பொருள்களை விற்று வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

காதி முகக் கவசங்கள், மூலிகை சோப்புகள், ஆடைகள், குர்தா போன்ற பொருள்கள் காதி என்ற வணிகப் பெயரில் மின் வணிக தளங்களில் விற்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அவை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT