இந்தியா

கேரளத்தில் கனமழை: கண்ணூர் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

19th Sep 2020 07:46 PM

ADVERTISEMENT

கேரளத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் கண்ணூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை பேசிய கண்ணூர் மாவட்ட ஆட்சியர் "செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்களுக்கு  கண்ணூரில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும் கனமழை காரணமாக நிலச்சரிவு இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மலைப்பகுதிகளுக்கு போக்குவரத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

ADVERTISEMENT

அடுத்த 12 மணி நேரத்தில் ஒடிசா, மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகத்தின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகள், தெலுங்கானம் மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT