இந்தியா

தாராவியில் 3 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

19th Sep 2020 06:50 PM

ADVERTISEMENT


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மொத்த கரோனா பாதிப்பு இன்று (சனிக்கிழமை) 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தாராவிப் பகுதியில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,018 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 21-ம் தேதி மொத்த பாதிப்பு 2,500-ஐக் கடந்த நிலையில், சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு இன்று 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

அங்கு 2,585 பேர் ஏற்கெனவே குணமடைந்ததையடுத்து, சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT