இந்தியா

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கரோனா

19th Sep 2020 10:44 PM

ADVERTISEMENT


கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரியங்க் கார்கேவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"எனக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லை. கடந்த 2 நாள்கள் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்."

இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்.

ADVERTISEMENT

முன்னதாக, கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணுக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT