இந்தியா

கரோனா: தில்லியில் சமூக பரவலை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்

DIN

கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் கரோனா சமூக பரவலாக மாறியதை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். இதனை தற்போது ஒப்புக்கொள்கிறோம் என்று தில்லி சுதாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் முன்பு இருந்ததை விட கரோனா பரவல் இரட்டிப்பாகியுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இதனிடையே தில்லியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ''தில்லியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளது. இதனை முன்பே ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். தில்லியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதை அரசு ஒப்புக்கொள்கிறது.

எனினும் சமூக பரவலுக்கான காரணங்களை மத்திய அரசு அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மட்டுமே விளக்க வேண்டும். தில்லியில் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக இரட்டிப்பு எண்ணிக்கையில் கரோனா தொற்று பதிவாகி வருகிறது.

மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகும் மக்கள் அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டால், அப்பகுதியில் சமூகப் பரவல் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இதனை மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தான் இறுதிசெய்ய வேண்டும்'' என்று சத்யேந்திர ஜெயின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT