இந்தியா

ரூ.2000 தாள்கள் அச்சிடுவது குறித்து மத்திய அரசு விளக்கம்

19th Sep 2020 08:44 PM

ADVERTISEMENT

ரூ.2000 மதிப்பிலான ரூபாய் தாளை நிரந்தரமாக அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2019 - 20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தும் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழஅக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 33,632 தாள்களாக இருந்த நிலையில், இது 2019 மார்ச் இறுதியில் 32,910 ஆகவும், 2020 மார்ச் இறுதியில் 27,398 தாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், கரோனா தொற்று காரணமாக ரூபாய் தாள்களை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் தாளைத் பொருத்த அளவில் நிரந்தரமாக அச்சிடத் தடை விதிக்கும் எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும், 2020 மார்ச் இறுதியில், நாட்டில் ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் விகிதம் 2.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2018 மார்ச் இறுதியில் 3.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Currency
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT