இந்தியா

மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை

19th Sep 2020 05:12 PM

ADVERTISEMENT

மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் மசோதா சனிக்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மழைக்காலக் கூட்டத்தொடரின் 6ஆம் நாளான இன்று (சனிக்கிழமை) மாநிலங்களவையில் மருத்துவப் பணியாளர்களைத் தாக்குபவர்களுகு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கும் மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மருத்துவப் பணியாளர்களை அவமதிப்பது அல்லது தாக்குவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

கரோனா தொற்று காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Harshavardhan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT