இந்தியா

ஜார்கண்ட்: ரயில்வே ஆய்வு வாகனம் மோதி யானை பலி

DIN

ஜார்கண்டில் ரயில்வே ஆய்வு வாகனம் மோதிய விபத்தில் காட்டு யானை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சைபாசா மாவட்டத்தில் உள்ள சிங்பும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வந்த ரயில்வே ஆய்வு வாகனம் காட்டுயானை மீது மோதி விபத்துக்குள்ளானது.

சரந்தா காட்டுப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில் ரயில்வே ஆய்வு வாகனம்  அதிவேகத்தில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று மண்டல வனத்துறை அலுவலர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட 40 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிக வேகத்தில் ரயில்வே ஆய்வு வாகனம் சென்று யானை மீது மோதியதால், காட்டு யானை உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உடற்கூறு ஆய்வுக்கு பிறகு யானை புதைக்கப்படும் என்றும் மண்டல வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT