இந்தியா

சத்தீஸ்கரில் ஆயுதப்படை வீரரை கடத்தி கொலைசெய்த மாவோயிஸ்டுகள்

18th Sep 2020 07:16 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கரில் ஆயுதப்படை வீரரை மவோயிஸ்டுகள் கடத்தி கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுதப்படை வீரர் மல்லுரம் சூர்யவன்சி. இவர் பிஜப்பூர் மாவட்டம் பட்டேடா கிராமத்தில் கடந்த 7 தினங்களுக்கு முன்பு
காணாமல் போனார். இதையடுத்து அவரை தேடும் பணி நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் அவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை வீரரை கொலை செய்து அவரது உடலை கங்காலூர்-பிஜப்பூர் சாலையில்
மாவோயிஸ்டுகள் வீசிச் சென்றுள்ளனர்.

உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Chhattisgarh
ADVERTISEMENT
ADVERTISEMENT