இந்தியா

கர்நாடகம், கோவாவில் மழைக்கு வாய்ப்பு

18th Sep 2020 09:00 PM

ADVERTISEMENT

கர்நாடகம் மற்றும் கோவாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. 

மாநிலங்களில் நிரம்பிய அணைகள் திறக்கப்பட்டுள்ளதால், பல்வேறு கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே அடுத்த 24 மணிநேரத்தில் கர்நாடகம் மற்றும் கோவாவின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளதாவது,  அடுத்த 24 மணிநேரத்தில் (செப்டம்பர் 19 வரை) வடக்கு உள்கர்நாடகம், தெற்கு கோவா, கர்நாடக கடலோரப்பகர்நாடகம் மற்றும் கோவாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.குதிகள் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் தொடர் மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், கல்புர்கி பகுதியில் உள்ள கங்கா நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பென்னிதோரா அணையும் நிரம்பியுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT