இந்தியா

கர்நாடகம்: மகாராஷ்டிரத்திற்கு வரும் 21 முதல் பேருந்து சேவை

18th Sep 2020 06:10 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு வரும் 21-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டன.

பொருளாதாரம் கடுமையாக முடங்கியதாலும், அரசு வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது.

அந்தவகையில் 4-ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வால் பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்தவகையில் வரும் 21-ஆம் தேதி முதல் கர்நாடகத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, மங்களூரு, தாவங்கரே பகுதிகளிலிருந்து மகாராஷ்டிரத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ஆந்திரம் மற்றும் கோவாவிற்கு ஏற்கனவே பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்திற்கும் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT