இந்தியா

ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்

18th Sep 2020 12:44 PM

ADVERTISEMENT


ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தவும், ரயில்வேயின் வருவாயைப் பெருக்கவும், ரயில் பயணிகளிடம் இருந்து பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ் இது பற்றி கூறுகையில், நாட்டில் மிக முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும், பயணிகளிடம் இருந்து பயன்பாட்டுக் கட்டணம் என்ற வகையில் மிகக் குறைந்த தொகை கட்டணமாகப் பெறப்பட உள்ளது. இதன் மூலம் ரயில் நிலையங்களை  மேம்படுத்தவும், அதிநவீன வசதிகைளை ஏற்படுத்தவும் இயலும் என்று கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள 7 ஆயிரம் ரயில் நிலையங்களில், இந்த பயன்பாட்டுக் கட்டணமானது 700 - 1000 ரயில் நிலையங்களில் மட்டுமே வசூலிக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பயன்பாட்டுக் கட்டணமானது, ரயில் நிலையங்களுக்கு ஏற்ற வகையில் வேறுபடும். மிகக் குறைந்த தொகையே பயன்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம் ரயில் டிக்கெட் விலை உயரக் கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 

Tags : train service
ADVERTISEMENT
ADVERTISEMENT