இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய மருத்துவக் குழு உதவி

18th Sep 2020 03:49 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் கரோனா பரவல் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மருத்துவக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உயர்தர மருத்துவர்கள் அடங்கிய குழுவினரை மத்திய சுகாதாரத்துறை அனுப்பிவைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த வாரம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6878-ஆக இருந்த நிலையில், தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,428-ஆக அதிகரித்துள்ளது. இதில் 6,115 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 33.9 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 1.24 சதவிகிதமாக உள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டு பகுதிகளை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும், பரிசோதனைகளை  துரிதப்படுத்தவும் மருத்துவக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் மருத்துவர் எஸ்.கே.சிங், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் விஜய் ஹட்டா உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ குழுவினர் மாவட்ட ஆட்சியர்களிடமும், மாவட்ட மருத்துவமனைகளிலும் பார்வையிட்டு மருத்துவப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT