இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 434 காவலர்களுக்கு கரோனா

18th Sep 2020 01:51 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 434 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 4 காவலர்கள் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவாக கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

கரோனா தொற்றுக்கு முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான காவலர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 434 காவலர்கள் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 20,801-ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,883 காவலர்கள் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவிலிருந்து 16,706 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4 காவலர்கள் உயிரிழந்ததால், மொத்தமாக கரோனாவால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 212-ஆக அதிகரித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT