இந்தியா

தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: இன்று 2,043 பேருக்குத் தொற்று

PTI

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,043 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,043 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,67 லட்சமாக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 30,673 ஆக உள்ளது. தொற்றிலிருந்து மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,35 லட்சமாக உயர்ந்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) ஒருநாளில் மட்டும் 50,634 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23.79 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 81.02 சதவிகிதமாக உள்ளது. இது தேசிய அளவில் 78.84 சதவிகிதமாக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு ஆயிரத்தை கடந்ததுள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT