இந்தியா

அசாமில் 1.5 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

18th Sep 2020 10:38 AM

ADVERTISEMENT

அசாமில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்தது. புதிதாக 1380 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தாகையில் வடகிழக்கு மாநிலமான அசாமில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக அசாம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,380 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,50,349-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு 30,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 20,557 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 6.71 சதவிகிதமாக உள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 528-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT