இந்தியா

தில்லியில் கரோனா பரிசோதனை 4 மடங்கு அதிகரிப்பு

17th Sep 2020 12:29 PM

ADVERTISEMENT

தில்லியில் கரோனா பரிசோதனை 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''தில்லியில் நேற்றைய (புதன்கிழமை) நிலவரப்படி புதிதாக 4,473 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 62,553 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விகிதம் 7.15 சதவிகிதமாக இருந்தது.

கரோனா இறப்பு விகிதம் கடந்த 10 நாள்களில் 0.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 14,521 படுக்கைகள் உள்ளன. இதில் பாதியளவு படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

ADVERTISEMENT

கரோனா பரிசோதனையை இரண்டு மடங்காக்கிய நிலையில் தற்போது நான்கு மடங்காக்கப்படுகிறது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரை எளிதில் கண்டறிந்து அப்பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து கண்காணிக்க இயலும். இதன்மூலம் அடுத்த 10- 15 நாள்களுக்கு கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது'' இவ்வாறு அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT