இந்தியா

வந்தே பாரத்: ஏர் இந்தியாவுக்கு ரூ.2,556 கோடி வருவாய்

17th Sep 2020 01:58 AM

ADVERTISEMENT

 


புது தில்லி: "வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் விமானங்களை இயக்கியதால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.2,556 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார். 
கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 23-ஆம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் சிக்கி கொண்ட இந்தியர்களை அழைத்து வர மே 6-ஆம் தேதி முதல் மத்திய அரசு "வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்களை இயக்கி வருகிறது. 
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "மே 6 முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏர் இந்தியா குழுமம் 4,505 முறை விமானங்களை வெளிநாடுகளுக்கு இயக்கி உள்ளது. சுமார் 11 லட்சம் இந்தியர்கள் இதில் பயணம் செய்துள்ளனர். அதில் இந்தியாவுக்குள் சுமார் 4 லட்சம் இந்தியர்களை ஏர் இந்தியா அழைத்துவந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டினர் சுமார் 1.9 லட்சம் பேர் அவர்களின் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஏர் இந்தியாவுக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை மொத்தம் ரூ.2,556.60 கோடி வருவாய் கிடைத்துள்ளது' என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT