இந்தியா

மத்திய கலாசாரத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று

17th Sep 2020 11:59 AM

ADVERTISEMENT

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 

ADVERTISEMENT

நேற்று இரவு என்னுடைய கரோனா பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கவனமாக இருக்கவும் எனப் பதிவிட்டுள்ளார். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT