இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

17th Sep 2020 12:49 PM

ADVERTISEMENT

எல்லைப் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பட்டமலோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தேடுதல் பணியில் ஈடுபட்ட வீரர்கள், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து இருதரப்பினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். ராணுவ வீரர்களில் ஒருவர் படுயாகம் அடைந்தார். 

படுகாயமடைந்த ராணுவ வீரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஜம்மு-காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து பேசிய அவர், ''ஸ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை நடத்தப்பட்ட 72 சோதனைகளில் 177 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த வெளிநாடுகளை சேர்ந்த தீவிரவாதிகள் அதிக அளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்'' என்று டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறினார்.

Tags : ஜம்மு-காஷ்மீர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT