இந்தியா

சினிமா பாணியில் ஓடும் லாரியில் கைவரிசை காட்டிய திருடர்கள்

17th Sep 2020 03:56 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் சினிமாப் பட பாணியில் ஓடும் லாரியில் ஏறி செல்போன், கணினி உள்ளிட்ட 82 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருள்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தின் ஸ்ரீ சிட்டியில் இருந்து சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான செல்போன், கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. 

இந்நிலையில் லாரியில் இருந்து ரூ.82 லட்சம் மதிப்பிலான மின்சாதனப் பொருள்களை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் மாவட்டத்தில் லார் சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பக்கக் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் ஓடும் லாரியின் கதவுகள் திறக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது.  

ADVERTISEMENT

இதுகுறித்துப் பேசிய குண்டூர் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.என். அம்மி ரெட்டி, “இந்தத் திருட்டுக்கு பின்னால் ஒரு குறிப்பிட்ட கும்பல் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது, காணொளிக் காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ” என்றார்.

ஆந்திரத்தில் ஓடும் லாரியில் இருந்து சினிமா பாணியில் மின்னணு சாதனங்கள் திருடப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Tags : AndraPradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT