இந்தியா

எல்லை அத்துமீறலை கைவிடாவிட்டால்: சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

17th Sep 2020 01:18 PM

ADVERTISEMENT


புது தில்லி: சர்வதேச எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை கைவிடாவிட்டால் எத்தனை வலிமையான எத்தனை பெரிய நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயங்காது என்று சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா - சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா செயல்பட்டால் எல்லையில் அமைதியை தொடர்ந்து  நிலைநாட்ட முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் சீனாவின் ஆக்ரமிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி தரப்படும். நமது மண்ணை யாரையும் ஆக்ரமிக்க விடமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

அருணாச்சலில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சொந்தம் கொண்டாட சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா சட்டவிரோதமாக ஆக்ரமித்துள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாகவே, சர்வதேச எல்லைப் பகுதியில் சீனா பல கட்டடமைப்புகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. நமது அரசும் தற்போது எல்லைப் பகுதியில் கட்டமைப்புகளை மேம்படுத்த முன்பு ஒதுக்கப்பட்ட நிதியை விட இரண்டு மடங்கு கூடுதல் தொகையை ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

எல்லைப் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஆனால், தொடர்ந்து அமைதியை நிலைநாட்டவே நாம் முயன்று வருகிறோம், அதேவேளை, எந்த சவலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்றும் ராஜ்நாத் கூறியுள்ளார்.
 

Tags : rajnath singh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT