இந்தியா

மகிழ்ச்சி, ஆரோக்கியம் அனைவருக்கும் கிடைக்க மகாளயபட்ச நாளில் பிரதமர் வாழ்த்து

17th Sep 2020 12:37 PM

ADVERTISEMENT

புது தில்லி: மகாளயபட்ச நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

மகாளயபட்சம் என்பது, இந்துக்கள் தங்களது மூதாதையரை நினைவு கூர்ந்து, வணங்கி, தர்ப்பணம் கொடுக்கும் மிக முக்கிய நாளாகும்.

இந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ள சுட்டுரைப் பதிவில், “இந்த மகாளய தினத்தன்று உலகப் பெருந்தொற்றை வீழ்த்துவதற்கான வலிமையை வேண்டி துர்க்கை அன்னையை வணங்குவோம். துர்க்கை அன்னையின் தெய்வீக ஆசீர்வாதங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். நமது புவிப்பந்து வளம் பெறட்டும். சுபமான மகாளயம்!” என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மக்களுக்கு மகாளயபட்ச நாளில் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT