இந்தியா

ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் மோடி: அமித் ஷா

17th Sep 2020 11:21 AM

ADVERTISEMENT

நாட்டின் சேவை மற்றும் ஏழைகளின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''நாட்டின் நலம் மற்றும் ஏழைகளின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நாட்டின் மிகபிரபலமான தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

தாழ்த்தப்பட்ட வர்க்கத்தை வளர்ச்சியின் பாதையில் இணைத்து வலுவான இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த ஒரு தலைவரை நாடு பெற்றுள்ளது.

பல தலைமுறைகளாக நாட்டின் வறுமையில் சிக்கியிருந்தவர்களுக்கு வீடு, மின்சாரம், வங்கிக்கணக்கு, கழிவறை, ஏழை தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு உள்ளிட்டவை வழங்கி மதிப்பு மிகுந்த வாழ்க்கையை வழங்கியுள்ளார்.
 
இவையாவும் நிலையான இலக்கு மற்றும் உறுதியான பலம் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியாலேயே சாத்தியமானது. நாட்டின் பலம் மற்றும் பாதுகாப்பையே இலக்காக கொண்டு இயங்கும் பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாட்டிற்கு சேவையாற்றுவது மிகப்பெரிய பெருமை.

பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று கோடிக்கணக்கான மக்களுடன் நானும் ஒருவனாக வாழ்த்துகிறேன்'' என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT