இந்தியா

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்: விடுப்பு கோரிய மன்மோகன் சிங், ப. சிதம்பரம், அன்புமணி

17th Sep 2020 02:00 AM

ADVERTISEMENT

 


புது தில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் உள்பட 14 மாநிலங்களவை எம்.பி.க்கள் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து விடுப்புகேட்டு கடிதங்கள் அனுப்பியுள்ளதாக  மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புதன்கிழமை அவையில் தெரிவித்தார். மருத்துவக் காரணங்களுக்காக அவர்களின் விடுப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் (காங்கிரஸ்), பரிமள் நத்வானி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), நரேந்திர ஜாதவ் (நியமன உறுப்பினர்), ஹிஷே லாசுங்பா (சிக்கிம் ஜனநாயக முன்னணி), சுஷில் குமார் குப்தா (ஆம் ஆத்மி), மானஸ் ரஞ்சன் புனியா (திரிணமூல் காங்கிரஸ்), பண்டா பிரகாஷ், லக்ஷ்மிகாந்த ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி), மகேந்திர பிரசாத் (ஐக்கிய ஜனதாதளம்), கேஜி கென்யி (நாகா மக்கள் முன்னணி) ஆகியோரும் விடுப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT