இந்தியா

ராஜஸ்தானில் புதிதாக 814 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 1,08,494

UNI


ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 814 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 814 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,08,494 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17,838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று நோயிலிருந்து 89,370 பேர் குணமடைந்துள்ளனர், இதில் 87,849 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,286 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மாநிலத்தில் 2,73,8,444 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT