இந்தியா

வேலைவாய்ப்பின்மை: ம.பி.யில் பக்கோடா போடும் போராட்டம்

17th Sep 2020 03:23 PM

ADVERTISEMENT

நாட்டில் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து மத்தியப்பிரதேசத்தில் பக்கோடா போடும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரித்து பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைவாய்ப்பின்மையை கண்டித்து கடந்த சில நாள்களாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பலர் குரல்கொடுத்து வருகின்றனர். 

இதனிடையே பிரதமர் மோடியின் பிறந்தநாள் தினத்தை வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே வேலைவாய்ப்பின்மை, ஊழல், பணவீக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பக்கோடா வறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பின்மையை கண்டித்து பக்கோடா வறுத்தனர்.

இன்று (புதன்கிழமை) காலை பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்த காங்கிரஸ்  எம்.பி.ராகுல்காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, ''நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையால் இன்றைய தினத்தை வேலைவாய்ப்பின்மை தினமாக இளைஞர்கள் கடைப்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மையே கண்ணியம். ஆனால் எத்தனை நாள்களுக்கு இந்த அரசாங்கம் இதனை நிறைவேற்றாமல் இருக்கும்?'' என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

Tags : rahul gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT