இந்தியா

கேரளத்தில் அமைச்சர் கே.டி. ஜலீலுக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம்

17th Sep 2020 02:46 PM

ADVERTISEMENT

கேரளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட பாஜகவை சேர்ந்த போராட்டக்காரர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.கலீலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதற்கு ஆஜராக மறுத்துவந்த அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு எதிராக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இரண்டுமுறை அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் ஜலீல் ஆஜரானார்.

இரண்டுமுறை நடைபெற்ற விசாரணையில் கிடைத்த தகவல்கள் முரண்பாட்டு இருந்ததால், மீண்டும் அமைச்சர் ஜலீலிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் நேற்று (புதன்கிழமை) கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே இன்று திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தலைமைச் செயலகம் முன்பு கோஷங்களை எழுப்பியதால், காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : கேரளம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT