இந்தியா

குஜராத்தில் இருந்து தில்லி நோக்கி சிஆர்பிஎஃப் சிறப்பு வீரர்கள் பேரணி

17th Sep 2020 02:34 PM

ADVERTISEMENT


புது தில்லி: குஜராத்தில் இருந்து தில்லி நோக்கி சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த சிறப்பு வீரர்களின் 900 கி.மீ. நீண்ட சைக்கிள் பேரணி தொடங்கியது.

பாதுகாப்புப் பணியின் போது, கை மற்றும் கால்களை இழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கிய பேரணி, அக்டோபர் 2-ம் தேதி தில்லி ராஜ்காட்டில் நிறைவு பெற உள்ளது. தகுதிவாய்ந்த இந்தியா என்பதை பறைசாற்றும் வகையில் இந்த பேரணி நடைபெறுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்ததினத்தன்று தொடங்கும் இந்த சைக்கிள் பேரணி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி தில்லியில் நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

900 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இந்த சைக்கிள் பேரணி குஜராத்தில் இருந்து ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகப் பயணித்து 16 நாள்களுக்குப் பின் தில்லியை வந்தடையும்.
 

 

Tags : crpf gandhi pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT