இந்தியா

மத்திய அமைச்சர் கட்கரிக்கு கரோனா

17th Sep 2020 01:48 AM

ADVERTISEMENT

 

மும்பை: மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், "எனது உடல்நிலை பலவீனமாக இருந்ததால் மருத்துவரிடம் ஆலோசித்தேன். அதன் பின்னர் பரிசோதனை செய்துகொண்டதில், நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது' என்று தெரிவித்தார். 

ஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்ரீபாத் நாயக், தர்மேந்திர பிரதான், கைலாஷ் சௌதரி, அர்ஜுன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், சுரேஷ் அங்காடி ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது 
குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT