இந்தியா

கேரளம் உள்பட 12 மாநிலத்தவர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர்: மத்திய அரசு தகவல்

17th Sep 2020 01:52 AM

ADVERTISEMENT

 


புது தில்லி: தென் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருப்பதை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போன்ற அரசு புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
மாநிலங்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது: 
கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் இருப்பதையும், அந்த மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்திருப்பதையும் என்ஐஏ போன்ற மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன. 
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தெலங்கானா, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களில் இதுவரை 17 வழக்குகளை என்ஐஏ பதிவு செய்து, 122 பேரை கைது செய்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் 
பதிலளித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT