இந்தியா

கரோனாவிலிருந்து மீண்ட 100 வயது மூதாட்டி

17th Sep 2020 11:35 AM

ADVERTISEMENT


வயது வேண்டுமானால் கரோனா தொற்றுக்கு எதிரானதாக இருக்கலாம், ஆனால் அவரது தைரியமும், தன்னம்பிக்கையும் தொற்றில் இருந்து எளிதாக விடுபட உதவியதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அசாமைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி மாயி ஹாண்டிக்யூ. மாநிலத்திலேயே அதிக வயதான பெண்மணி கரோனாவால் பாதிக்கப்பட்டார் என்றால் அது இவராகத்தான் இருக்கும்.

குவகாத்தியில் உள்ள மகேந்திர மோகன் சௌத்ரி மருத்துவமனையில் இருந்து மாயி இன்று வீடு திரும்பியுள்ளார்.

முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வரும் மாயி பத்து நாள்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவரை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதற்கு முன்பு, மருத்துவமனையிலேயே மருத்துவர்களும், செவிலியர்களும் இணைந்து, கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மருத்துவர்கள் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அவரை பாட்டி என்று அன்போடு அழைத்துவந்தனர். மருத்துவமனையில் இருந்த போது அவர் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் உணவு சிறப்பாக இருந்ததாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

ADVERTISEMENT

மருத்துவர்களும் செவிலியர்களும் தன்னை மிகவும் கனிவுடன் கவனித்துக் கொண்டனர். அசைவ உணவுகளை விரும்பு உண்ணும் எனக்கு, பெரும்பாலான நேரம் அசைவ உணவுகளையே வழங்கினார்கள். அவை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

மேலும், அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் 100 வயது மூதாட்டி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பேசுகையில், அவர் மருத்துவமனைக்கு வந்த போது, அவரது வயதுதான் எங்களுக்கு கவலையை அளித்தது. ஆனால் அவர் எப்போதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடன் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே இருந்ததே, விரைவில் அவர் குணமடைய வாய்ப்பாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

இவருடன் முதியோர் இல்லத்தில் இருந்த 12 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதில், இதுவரை 5 பேர் இல்லத்துக்கு திரும்பிவிட்டனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT