இந்தியா

உ.பி. நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

17th Sep 2020 12:33 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-லக்னௌ நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பாலத்தின் மீது மோதியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகினர். 

தில்லியில் ஆன்ந்த் விஹாரில் இருந்து கோரக்பூருக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு அடுக்கு பேருந்தில் சுமார் 80 பயணிகள் வரை இருந்தனர். 

இந்நிலையில், ஜோகி கோட் கிராமத்திற்கு அருகே பேருந்து ஓட்டுநர் லாரியை முந்தியதில், அங்குள்ள பாலத்தின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40 வயதுள்ள நபர் ஒருவர் உயிரிழந்தார். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

விபத்தில் இறந்தவர் கோரக்பூர் ஜோகி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

காயமடைந்தவர்கள் அங்குள்ள சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாக பங்கர்மாவ் வட்ட அலுவலர் கௌரவ் திரிபாதி தெரிவித்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT