இந்தியா

மணாலி - லே இடையே உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதைப் பணி நிறைவு

16th Sep 2020 12:38 PM

ADVERTISEMENT


மணாலி: மணாலி - லே பகுதியை இணைக்கும் உலகின் மிக நீண்ட அடல் சுரங்கப் பாதையை அமைக்கும் பணி சுமார் பத்து ஆண்டுகளில் நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக இது 6 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்துக்குள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

அடல் சுரங்கப் பாதை, மணாலி -  லே பகுதிகளை இணைக்கும், உலகிலேயே மிக நீண்ட சுரங்கப் பாதை, பூமியில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைக்க ஆறு ஆண்டுகளுக்கும் குறைவாக திட்டமிடப்பட்டது, ஆனால், இந்த சுரங்க பாதையை அமைக்க 10 ஆண்டுகள் ஆகியுள்ளது என்று மூத்த பொறியாளர் கே.பி. புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

இந்த சுரங்கப் பாதைக்குள் ஒவ்வொரு 60 மீட்டருக்கும் ஒரு சிசிடிவி கேமரா, ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு அவசர கால வழி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மணாலியில் இருந்து லேஹ் செல்வதற்கான தொலைவில் 46 கிலோ மீட்டர் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 4 மணி நேரப் பயணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்றும் புருஷோத்தமன் கூறியுள்ளார்.

சுரங்கப் பாதையை அமைக்கும் பணியின் போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். ஆனால் ஒருங்கிணைந்த பணியால் அவை அனைத்தையும் வென்றோம். சுரங்கப் பாதையின் அகலம் 10.5 மீட்டராகும். இதில் இரண்டு பக்கத்திலும் 1 மீட்டருக்கு நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ADVERTISEMENT

Tags : central govt
ADVERTISEMENT
ADVERTISEMENT