இந்தியா

கரோனா பரவலுக்கும் கடவுள் மேல் பாஜக பழிபோடும்: காங்கிரஸ்

16th Sep 2020 01:04 PM

ADVERTISEMENT

கரோனா பரவலை கட்டுப்படுத்தாமல் கடவுள் மேல் பாஜக பழி போடுவதாக காங்கிரஸ்  குற்றம் சாட்டியுள்ளது. நாட்டில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு 50 லட்சத்தை தாண்டிய நிலையில் பரவல் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ''கரோனாவுக்கு எதிரான போரை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டு பேசினார். கரோனா மகாபாரதப் போர் நடைபெற்று வருகிறது, ஆனால் மோடி அரசு களத்தில் காணவில்லை என்று கூறினார்.

கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தமாக 50,20,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 11 நாள்களில் மட்டும் 40 லட்சத்திலிருந்த கரோனா பாதிப்பு தற்போது 50 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில்1290 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 82,066-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள ரன்தீப் சுர்ஜிவாலா, ஒருநாளில் அதிகபட்சமாக கரோனாவால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா (90,123 பேர் பாதிப்பு) முதலிடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

ஒரு நாளில் கரோனாவால் உயிரிழப்போரின் பட்டியலில் இந்தியா (1290 இறப்பு) முதலிடத்தில் உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 31 நாள்களில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

அதிக அளவாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலில் (9,95,933 பேர் சிகிசையில்) இரண்டாவது இடத்திலும், கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் (82,066 இறப்பு) மூன்றாவது இடத்திலும் இந்தியா உள்ளது.

இவ்வாறு கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவல் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். இல்லையென்றால் கரோனா பரவலுக்கு கடவுளே காரணம் என்று பாஜக அரசு பழி போடும்'' இவ்வாறு அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 
 

Tags : கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT