இந்தியா

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

16th Sep 2020 07:32 PM

ADVERTISEMENT

அணுசக்தி உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு மக்களவையில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் மொத்தம் 9,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 12 அணு மின் உலைகளை கட்டுவதற்கான நிர்வாகம் மற்றும் நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வ பதிலில் மக்களவையில் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது 6,780 மெகாவாட் திறன் கொண்ட 22 அணுசக்தி உலைகள் உள்ளன. கூடுதலாக, மொத்தம் 6,700 மெகாவாட் திறன் கொண்ட ஒன்பது உலைகள் தற்போது கட்டுமானத்தில் உள்ளன.

10 அழுத்தப்பட்ட கனநீர் உலைகளில் மத்தியபிரதேசத்தில் 700 மெகாவாட் திறன் கொண்ட 2 உலைகளும், கர்நாடகத்தில் 2 உலைகளும், ராஜஸ்தானில் 4 உலைகளும், ஹரியானாவில் 2 உலைகளும் அமைக்கப்பட உள்ளாதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 மென்னீர் அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT